
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் உலகம் முழுவதும் 12,000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கான முன்பதிவு, வரலட்சுமி விரத நாளான ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாரான இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது; இதில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.