
பழனி தண்டபாணி சுவாமி மடம் நில மோசடியில் ஈடுபட்ட அதே கும்பல், ஆயக்குடியில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்துள்ளது.
இந்த முறைகேடான பத்திரப்பதிவை ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் வழக்கறிஞர் சிவகுமார் ஆவணங்கள் தயார் செய்ய, சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கடந்த ஜூலை 7-ம் தேதி பதிவு செய்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் நில மோசடி தொடர்பாக 19 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பழனி கோவில் நில மோசடியில் ஈடுபட்ட ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.