
அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமான நிலையத்திற்கே நேரில் சென்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்ற நிலையில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
ஈரான் மீதான போர் மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு வரி விதிக்கும் தடைச் சட்டம் போன்ற முக்கிய உலகளாவிய சூழல்களுக்கு மத்தியில் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.
பல முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகவும், ஆக்கபூர்வமான சீனா-அமெரிக்க உறவுக்கு இது புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளதாகவும் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.