
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகிலுள்ள லா வெரியர் பகுதியில் ஓடும் காரில் இருந்து மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இந்த கொடூரத் தாக்குதலில் குண்டு பாய்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர்.