
மத்திய கிழக்குப் போரால் ஹார்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், ஈராக்கின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி 34 லட்சம் பேரலிலிருந்து 27 லட்சமாக சரிந்துள்ளது.
ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதி தற்போது 15 முதல் 17 லட்சம் பேரலாகக் குறைந்துள்ளதாகவும், இது உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தைப் பாதித்துள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் பாசிம் முகமது குதைர் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையைச் சார்ந்திருப்பதை குறைக்க துருக்கி மற்றும் அகபா துறைமுகம் வழியாக மாற்று ஏற்றுமதி வழிகளை உருவாக்க ஈராக் அரசு திட்டமிட்டு வருகிறது.