
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதைத் தடுக்க, ஆன்லைன் முன்பதிவு செய்யும் புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் இன்று நள்ளிரவு முதல் சோதனை முறையில் தொடங்கப்பட உள்ளதாகவும், இது வீடுகளுக்கு மது விநியோகம் செய்யும் திட்டம் அல்ல என்றும் அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
மது பிரியர்கள் செயலியில் முன்பதிவு செய்து பணம் செலுத்திய பிறகு, கடைகளில் கியூஆர் கோடை காண்பித்து எம்.ஆர்.பி விலையில் மதுவை பெற்றுக்கொள்ளலாம்.