
வங்கதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து மத குரு சின்மயி கிருஷ்ண தாஸின் தாயார் சந்தியா ராணி தார் உடல்நலக்குறைவால் காலமானார்.
தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சிட்டகாங் மாவட்ட ஆட்சியர் முஹம்மது ஜாஹிதுல் இஸ்லாம் மியா உத்தரவின் பேரில் அவருக்கு 5 மணி நேரம் மட்டும் பரோல் வழங்கப்பட்டது.
சிறையிலிருந்து தற்காலிகமாக வெளியே வந்த அவர், சிட்டகாங்கில் உள்ள புண்டரீக் தாம் கோயிலில் உள்ள ராதா-கிருஷ்ணர் விக்கிரகத்தின் பாதங்களைத் தொட்டு வணங்கிய உணர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.