
இந்தியாவில் ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் திறமையான பணியாளர்களுக்கு 53 சதவீதம் பற்றாக்குறை நிலவுவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களில் 16 சதவீதம் பேர் மட்டுமே ஏஐ தொடர்பான திறன்களைப் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறையைச் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் பணிகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.