Health & Environment
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்

Dinamalar1h
THE BRIEF
1

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2

நீலகிரி, கோவை, கடலுார், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், பெரம்பலுார், அரியலுார், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இந்த மழைக்கு வாய்ப்புள்ளது.

3

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.