
மஸ்கட்டில் நடைபெறவுள்ள ஆடவருக்கான யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ராகுல் திராவிட்டின் மகன் அன்வய் திராவிட் மற்றும் வீரேந்தர் சேவாகக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற வினு மங்கட் போட்டியில் குஜராத்துக்கு எதிராக அன்வய் 151 ரன்களும், சண்டிகருக்கு எதிராக ஆர்யவீர் 173 ரன்களும் விளாசி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.