
ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா- வேலவன் செந்தில் குமார் ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
அவர்கள் சக நாட்டை சேர்ந்த சூரச் சந்த்- ஷமீனா ரியாஸ் ஜோடியை 11-7, 11-10 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஜோடி இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.