/nakkheeran/media/media_files/2026/09/18/trbrajaa-2026-09-18-15-11-03.jpg)
தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சென்னை அன்பகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தில் உலக நாடுகளிலிருந்து ஏறத்தாழ 12.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்ததாக அவர் குறிப்பிட்டார்.
லண்டனில் ஹோட்டலுக்கு எதிரே உள்ள மருத்துவமனை அருகில் விஜய் மற்றும் அவரது தரப்பினர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.