
தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது தூத்துக்குடி மாவட்ட தவெகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆர்.பி. உதயகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.