
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் சிறார் ஆபாச படங்களை வைத்திருந்த இந்திய வம்சாவளி நபர் அபிஷேக் விஜயகுமார் கைது செய்யப்பட்டு, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் எப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவரது மின்னணு சாதனங்களில், 3 வயது குழந்தை தொடர்பான படம் உட்பட 200-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் கண்டறியப்பட்டன.
குற்றத்தை ஒப்புக்கொண்ட அபிஷேக் விஜயகுமாருக்கு எதிரான இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.