
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி விரிவாக்கம் செய்யப்பட்டு, சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ஆ.ராஜ்மோகன் ஆகியோர் தலைமைச் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியச் செய்தித் தொடர்பாளர்களாக ஃபெலிக்ஸ் ஜெரால்ட், அமெரிக்கை வி. நாராயணன் உள்ளிட்ட 9 பேரும், மாநிலச் செய்தித் தொடர்பாளர்களாக 9 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரும் தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.