
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தனது ஆல்-டைம் சிறந்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமாருக்கு முதலிடம் அளித்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் முகமது ஷமியையும், தொடர்ந்து குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரையும் அவர் தேர்வு செய்துள்ளார்.
தனது சிறந்த இந்திய லெவன் அணியில் சச்சின் டெண்டுல்கர், கௌதம் கம்பீர், விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோரையும் அவர் சேர்த்துள்ளார்.