
தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளதுடன், மாநகர மற்றும் நகர்ப்புற எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் சாதாரண பேருந்துகள் உள்பட மொத்தம் 12,695 பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடையவுள்ளனர் என்பதும், இதற்கு வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.