/nakkheeran/media/media_files/2026/09/18/anbilccbe-2026-09-18-11-14-05.jpg)
தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள் மற்றும் காசோலைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆஜராகியுள்ளார்.