HSBC தரகு நிறுவனம் வோடஃபோன் ஐடியா பங்கின் இலக்கு விலையை ரூ.8.25 ஆக உயர்த்தினாலும், இது தற்போதைய விலையான ரூ.15.39-லிருந்து 46.4% சரிவைக் குறிப்பதாக எச்சரித்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் வோடஃபோன் ஐடியா தனது செயல்பாட்டுப் பணப்புழக்கத்தை மூன்று மடங்கு அதிகரித்தால் மட்டுமே அலைக்கற்றை கட்டணக் கடமைகளை நிறைவேற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FY26-29E காலகட்டத்தில் நிறுவனத்தின் EBITDA 15% CAGR-இல் வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 2030 முதல் ஸ்பெக்ட்ரம் புதுப்பித்தல்களுக்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும் என HSBC குறிப்பிட்டுள்ளது.