
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழையும், தேனி, மதுரை, விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
உள் தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.