Health & Environment
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

polimernews1h
THE BRIEF
1

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழையும், தேனி, மதுரை, விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

3

உள் தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.