
பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளில் ஆப்கானிஸ்தான் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்தும், ஏற்கனவே பயிலும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு உத்தரவிட்டுள்ளது.
லாகூரில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த உத்தரவை அமல்படுத்தி, அங்கு பயிலும் 22 ஆப்கான் மாணவர்களுக்கு வெளியேற 24 மணி நேர கெடு விதித்துள்ளது.
முறையான ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.