
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்கள் என நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி, 5 ஒருநாள், 5 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
2027 உலகக்கோப்பைத் தொடருக்குத் தயாராகும் வகையில், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதே தங்களது முக்கிய இலக்கு என சான்ட்னர் தெரிவித்துள்ளார்.