ஸ்பெயினின் மாட்ரிட் மற்றும் அவிலா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகப் பரவி வரும் காட்டுத்தீயால் சுமார் 15,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
தீயின் தீவிரம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கிரீஸ் மற்றும் இத்தாலி நாடுகள் தீயணைப்பு விமானங்களை அனுப்பி உதவி வருகின்றன.
கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ வேகமாகப் பரவுவதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.