
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள 'மைசா' திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரவீந்திர புள்ளே இயக்கியுள்ளார்.
கோண்ட் பழங்குடியினரின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமான ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்ட பான் இந்தியா படமாகும்.