
கர்நாடகா அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் தண்ணீர் திறக்காததால், ஆகஸ்டு 3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 29-ம் தேதி முதல் கர்நாடகா வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்திருக்க வேண்டும் என்றும், கடந்த 3 மாதங்களில் 17 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணவும், மேகதாது அணைக்கு எதிராக தனி வழக்கு தொடரவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், திமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.