
துபாயில் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் விளையாடிய இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், இந்த அரையிறுதிப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்கா - நமீபியா இடையிலான ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.