
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட உள்ளதை அடுத்து, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான சேவைகள் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளன.
இந்த இடமாற்றமானது 2027 பிப்ரவரி முதல் ஜூலை மாதத்திற்குள் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இண்டிகோ நிறுவனம் பிப்ரவரி முதல் தனது 12 தினசரி சர்வதேச விமானங்களை நவி மும்பைக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது.
பஹ்ரைன், ரியாத், மஸ்கட் உள்ளிட்ட 11 நகரங்களுக்கான சேவைகள் நவி மும்பைக்கு மாற்றப்படுவதோடு, காத்மாண்டுவிற்கு புதிய சேவையும் தொடங்கப்பட உள்ளதுடன், பழைய விமான நிலையத்தில் கிடைக்கும் இடவசதியைக் கொண்டு புதிய சர்வதேச சேவைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.