
தாய்லாந்துக்கு எதிரான ஆசிய கோப்பை டி20 போட்டியில் 19 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறினார்.
மந்தனா மொத்தம் 10,756 ரன்கள் குவித்து, 10,740 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்தின் சூசி பேட்ஸை பின்னுக்குத் தள்ளினார்.
இந்திய அணி தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், முதலிடத்தில் உள்ள மிதாலி ராஜின் 10,868 ரன்கள் சாதனையை முறியடிக்க மந்தனாவுக்கு இன்னும் 112 ரன்கள் தேவை.