
2027-ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்திர மாநாட்டை நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், விதிமுறைப்படி இந்தியப் பிரதமர் உட்பட அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பது குறித்த முடிவுகள், அழைப்பிதழ் அனுப்பப்பட்ட பின்னரே பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.