
ஜிம்பாப்வேயில் ஹராரே - மஸ்விங்கோ தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மீது லாரி மோதிய கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
மவுமா நகருக்கு கிறிஸ்தவ மத நிகழ்ச்சிக்காகச் சென்ற பஸ்சில் 35 பேர் பயணித்த நிலையில், விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.