Technology
பினான்ஸ் கிரிப்டோ நிறுவன கணக்குகளில் இருந்து ரூ.60,000 கோடி திருட்டு

பினான்ஸ் கிரிப்டோ நிறுவன கணக்குகளில் இருந்து ரூ.60,000 கோடி திருட்டு

Hindu Tamil Thisai3h
THE BRIEF
1

பிரபல கிரிப்டோ கரன்சி நிறுவனமான பினான்ஸின் கணக்குகளில் இருந்து 6.3 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.60,000 கோடி மதிப்பிலான கிரிப்டோ சொத்துகள் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளன.

2

கிரிப்டோ வரலாற்றிலேயே நடந்த மிகப்பெரிய சைபர் தாக்குதலான இதன் பின்னணியில் வட கொரியாவைச் சேர்ந்த அரசு ஆதரவு பெற்ற ஹேக்கிங் குழுக்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

3

சர்வதேச சைபர் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர் கிரிப்டோ சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் வைப்புத்தொகை பாதுகாப்பாக இருப்பதாகவும் பினான்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.