சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,400 வரை உயர்ந்துள்ளதால், நகைக்கடை வர்த்தகம் மந்தமடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.