
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 78,570.6 கோடி டாலராக அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில் அந்நிய நாணய சொத்துகள் 4,749.8 கோடி டாலர் அதிகரித்து 64,816.8 கோடி டாலராக உள்ளது.
தங்கம் கையிருப்பு 259.4 கோடி டாலர் குறைந்து 11,381.6 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.