
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸ் நகரில் இன்று தொடங்குகிறது.
பயிற்சி ஆட்டத்தின் போது வலது கையில் காயம் அடைந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விலகியுள்ள நிலையில், சல்மான் ஆஹா அணியை வழிநடத்துவார்.
இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 92 டெஸ்ட் போட்டிகளில், இங்கிலாந்து 30 வெற்றிகளையும், பாகிஸ்தான் 23 வெற்றிகளையும் பெற்றுள்ளன.