
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் அரசின் மெத்தனத்தைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று ஆகஸ்ட் 14-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.
இந்த போராட்டத்தில் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.