
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜூலை 20 முதல் 25 வரை நடந்த போராட்டங்களில் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி டில்லி, பீஹார், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில வழக்குகளை ரத்து செய்தது.
டில்லியில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 2,873 நபர்கள் மீது மட்டும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.