
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் துலீப் கோப்பை இறுதிப்போட்டியில், இஷான் கிஷன் தலைமையிலான ஈஸ்ட் ஸோன் அணி 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களைக் கடந்துள்ளது.
முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை தோல்வியே சந்திக்காத கேப்டனாக உள்ள இஷான் கிஷன், இதுவரை வழிநடத்திய 15 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
சௌத் ஸோன் அணிக்கு எதிரான இந்த முக்கியமான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, தனது வெற்றிப் பயணத்தைத் தொடர இஷான் கிஷன் தீவிரமாகப் போராடி வருகிறார்.