
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ள 'இம்மார்ட்டல்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தியாவில் அரிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் சென்னையில் நடைபெற்ற நிலையில், படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டரை ஆண்டுகள் உழைப்பில் உருவான இப்படத்தில் கிராபிக்ஸ் மற்றும் இசை சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.