புதனின் ஆதிக்கம் பெற்ற இத்தினத்தில் உங்களுடைய புத்தி கூர்மை வெளிப்பட்டு அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
வாழ்க்கைத் துணையுடன் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும், மனம் விட்டுப் பேசும் சூழலும் அமையும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களையும், புதிய பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வதற்கான நல்ல நாளாக இது இருக்கும்.