
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
Prime Air Flight 7598 என்ற Boeing 767-300 ரக விமானம், பியூர்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மியாமி வந்தபோது விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளன.