
தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் ஈரான் வேண்டுகோள் விடுத்ததாக அதிபர் டிரம்ப் கூறியதை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை என்றும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலைத் தடுக்க அமைதி ஒப்பந்த வரைவு தயாராகி வருவதாக டிரம்ப் கூறிய நிலையில், ஈரான் அதனைப் பொய்யான தகவல் என நிராகரித்துள்ளது.