
நீட் மற்றும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு இணையதளங்களின் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்த 16 வயது மாணவர் ரைலன் அணிலை ஐஐடி கான்பூர் பணியில் சேர்த்துள்ளது.
துபாயில் 12-ஆம் வகுப்பு படிக்கும் அணில், ஐஐடி கான்பூரின் C31Hub மையத்தில் இளநிலை சைபர் பாதுகாப்பு பொறியாளராக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
ஐஐடி-க்களில் பணியமர்த்தப்பட்டவர்களில் மிக இளையவரான இவர், பல்வேறு இணையதளங்களின் பாதுகாப்பு பகுப்பாய்வு செய்யும் பொறுப்பை மேற்கொள்வார் என இயக்குநர் மனிந்திர அகர்வால் தெரிவித்தார்.