
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் மைதான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், சொந்த நாட்டிலேயே இந்திய அணி 'அவே டீம்' ஆக விளையாடும் விசேஷ சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணியில் திரும்பியுள்ளார்.