
வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களைக் கடத்தி ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுத்தும் 'சைபர் அடிமைத்தனம்' குறித்து சிபிஐ எச்சரித்துள்ளது.
போலி ஏஜென்சிகள் மூலம் வெளிநாடு செல்லும் இளைஞர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்து, அவர்களைச் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்துவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சந்தேகம் உள்ளவர்கள் உடனடியாக சைபர் க்ரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.