Education
மாணவிகள் மீது தாக்குதல்: தென்காசி அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு

மாணவிகள் மீது தாக்குதல்: தென்காசி அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு

Daily Thanthi2h
THE BRIEF
1

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவிகளை பிரம்பால் தாக்கிய ஆசிரியை தேன்மரியசுகந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2

கடந்த 20-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்த நிலையில், பவித்ரா என்ற மாணவி 3 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார்.

3

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பி.என்.எஸ் சட்டம் பிரிவு 115(2) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.