
வியட்நாமில் நடைபெற்று வரும் வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில், சக நாட்டு வீரரான சன்ஸ்கார் சரஸ்வத்தை பிரனாய் 28-26, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ரக்ஷிதா ராம்ராஜ் மற்றும் இஷாராணி பரூவா ஆகியோரும் அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளனர்.