
சவுதி அரேபியாவில் மத நிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழரான அனோஜன் சிவராசாவை மீட்க பிரதமர் மோடியின் உதவியை நாடுமாறு இலங்கை எதிர்க்கட்சி எம்பி மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு ஆரம்பத்தில் 5 ஆண்டுகள் சிறையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டு பின்னர் மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது.
சவுதி அரேபியா மன்னர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடிக்கு நெருக்கமான உறவு இருப்பதால் அவர் தலையிட்டால் மனிதாபிமான உதவி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.