
ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 6 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய குல்பதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 5.1 ஓவரிலேயே இலக்கை எட்டி கோப்பையை தட்டிச்சென்றது.