
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 லஞ்சம் கேட்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
லஞ்சம் கேட்டு கொள்முதல் செய்ய மறுப்பதால் கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் இதே மாவட்டத்தில் லஞ்ச புகாரில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், மீண்டும் முறைகேடு நடப்பது அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.